2024 Placements

முகமது இஸ்மாயில் தொழில் பயிற்சி நிலையத்தில் நேற்று 23.2.2024 அன்று நடைபெற்ற வளாகத் தேர்வில் 16க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டனர் .இந்நிகழ்வில் ஐடிஐ தாளாளர் எம் நூர்தின் அவர்கள் வரவேற்று உரையாற்றினார். இதில் சிறப்ப விருந்தினராக திருநெல்வேலி மாவட்ட வேலை வாய்ப்பு திறன் மேம்பாட்டு மைய உதவி இயக்குனர் திரு ஜார்ஜ் பிராங்கிளின் மற்றும் உதவி அலுவலர் திருமலை குமார் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கினர். மேலும் திருநெல்வேலி மாவட்ட தனியார் ஐடிகளின் கூட்டமைப்பு சங்கத் தலைவர் எஸ் முத்துசாமி அவர்கள் வாழ்த்துரை ஆற்றினர் .70 க்கு மேற்பட்ட மாணவர்கள் வளாகத் தேர்வில் கலந்து கொண்டனர். முடிவில் முதல்வர் கே. லாரன்ஸ் நன்றி உரை ஆற்றினார்.


நிகழ்வின் இரண்டாம் நாளான இன்று 24/7/2024 தேர்வு செய்யப்பட்ட தேர்வு செய்யப்பட்ட 53 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா நடைபெற்றது நிகழ்வின் ஐடிஐ தாளாளர் எம் நூர்தின் அவர்கள் வரவேற்பு உரை ஆற்றினார்கள். முஸ்லிம் அனாதை நிலைய செயலாளர் Dr எம் கே எம் முகமது ஷாபி அவர்கள் மற்றும் பொருளாளர் Er ஆரிப் சுல்தான் முன்னிலை வகித்தனர். 53 மாணவர்களுக்கு பணி நியமன ஆணையை முஸ்லிம் அனாத நிலைய செயலாளர் டாக்டர் எம் கே எம் முகமது ஷாபி மற்றும் Er ஆரிப் சுல்தான் வழங்கினர். இதில் மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் வந்து பணி நியமன ஆணைய பெற்றுக் கொண்டனர். நிகழ்வின் இறுதியில் முதல்வர் லாரன்ஸ் நன்றி கூறினார்.

Scroll to Top