அன்புடையீர் ,
திருநெல்வேலி மாநகர காவல்துறை சார்பாக நடைபெற்ற போதைஒழிப்புவிழிப்புணர்வு குறித்து குறும்படம் எடுக்கும் போட்டி நடத்தப்பட்டது.இதில் பல கல்வி நிறுவனங்கள் ,சேனல்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டன.இந்த போட்டியில் கலந்து கொண்ட நமது முஹம்மதுஇஸ்மாயில்ஐடிஐ சிறப்பாக செயல்பட்டு இரண்டாம் இடம் பிடித்துள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.மேலும் இது சம்பந்தமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாநகர துணை ஆணையர் திரு.விஜயகுமார் IPS மற்றும் திருநெல்வேலி மாநகர துணை ஆணையர் (மேற்கு) திரு.பிரசன்ன குமார் IPS மற்றும் திருநெல்வேலி போதை பொருள் தடுப்பு பிரிவு ஆய்வாளர் திருமதி.இந்திரா அவர்கள் மற்றும் செந்தூர் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் Dr.திரு.சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் பரிசு தொகையும் மற்றும் சான்றிதழ் ஆகியவற்றை நமது ஐடிஐ சார்பாக நமது தாளாளர் ஜனாப் திரு.M.நூருதீன் அவர்கள் பெற்று கொண்டார்கள்.
இப்படிக்கு
முஹம்மது இஸ்மாயில் ஐடிஐ
ரஹ்மத் நகர்.




